நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வனச்சரகம், ஈளாடா பிரிவு, கோடநாடு பீட்டிற்கு உட்பட்ட கர்சன்வேலி-&1 காப்புக்காட்டில், கடந்த 5.9.2024 அன்று சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்து, கற்பூர மரங்களை வெட்டியதாகவும், தடுத்தவர்களை மீது ஏர்கன் மூலம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், ரகசிய தகவல் கிடைக்கப் பெற்ற கோத்தகிரி வனத்துறையினர், புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களைப் பிடித்த விசாரித்ததில், குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானது. அதையடுத்து அவர்களிடமிருந்து ஏர்கன் துப்பாக்கி, அதற்கான தோட்டாக்கள், வெட்டுக்கத்தி & கை ரம்பம் ஆகியன
பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கொடநாடு கிராமம் எலடா பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (39), அருள்செல்வன் (30), நாகராஜ் (34), கிருஷ்ண குமார்(48),
பிரகாஷ்குமார் (22) ஆகிய ஐந்து பேரும் நேற்று குன்னூர் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.



