fbpx
Homeபிற செய்திகள்தேசிய கண் தான விழிப்புணர்வு மனிதச்சங்கிலி

தேசிய கண் தான விழிப்புணர்வு மனிதச்சங்கிலி

தேசிய கண் தான விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னையில் மனிதச்சங்கிலி நிகழ்வை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை  நடத்தியது.  

கண் தானத்திற்கான உறுதிமொழியை எடுக்க, மக்கள் https://www.dragarwal.com/eye-donation/ இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது உதவிக்கு கண் தான உதவி எண் – 94444 44844 ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதில் குற்றவியல் புலன் விசாரணை துறையின் நுண்ணறிவுத் துறை டிஐஜி  பகலவன் எட்வர்டு எலியட்ஸ் கடற்கரையிலிருந்து இந்த மனிதச்சங்கிலி நிகழ்வை தொடங்கி வைத்தார்.  டாக்டர். அகர்வால்ஸ் ஆப்டோமெட்ரி இன்ஸ்டிடியூட்டின் மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் 200க்கும் அதிகமான நபர்கள் இந்நிகழ்வில் பங்களிப்பை வழங்கினர். 

பின்னர் பகலவன் ஐபிஎஸ் பேசுகையில், “கண் தானம் மீது விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த மகத்தான செயல்முயற்சியில்  பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி, கண் வங்கியின் மருத்துவ இயக்குனர் டாக்டர். ப்ரீத்தி நவீன் உள்ளிட்டோர் அகர்வால்ஸ் மருத்துவமனையின்

செயல்பாட்டை பெருமிதமாக பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img