fbpx
Homeபிற செய்திகள்தென்னந்தோப்புகளில் ஊடுபயிர்களாக விவசாயிகள் கிழங்கு சாகுபடி செய்தால் நிலையான வருமானம் ஆராய்ச்சியாளர் நிறுவன இயக்குநர் டாக்டர்...

தென்னந்தோப்புகளில் ஊடுபயிர்களாக விவசாயிகள் கிழங்கு சாகுபடி செய்தால் நிலையான வருமானம் ஆராய்ச்சியாளர் நிறுவன இயக்குநர் டாக்டர் ஜி.பைஜு அறிவுறுத்தல்

மத்திய கிழங்குபயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் (சிடிசிஆர்ஐ), திருவனந்தபுரம், கேரளாதென்னை வளர்ச்சி வாரியம் (CDB), கொச்சி, நிதியுதவி திட்டத்தின் கீழ் திருப்பூரில் உள்ள பெருமாநல்லூரில் கருத்தரங்கு நடைபெற்றது. ஐசிஏஆர் -சிடிசிஆர்ஐ இயக்குநர் டாக்டர் ஜி.பைஜு தலைமை விருந்தினராகப் பங்கேற்று தொடக்க உரையாற்றினார்.

திருப்பூர் மாவட்டத்தில் தென்னை தோட்டங்களில் பயிர் மற்றும் விவசாய முறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். கிழங்கு பயிர்களான மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, சேனைக்கிழங்கு மற்றும் அரோரூட் ஆகியவை தென்னை விவசாயிகளுக்கு மீள்தன்மை மற்றும் நிலையான வருமானத்திற்கு தென்னந்தோப்புகளுக்கு மிகவும் உகந்த ஊடுபயிராகும், என்றார்.

தென்னை மற்றும் கிழங்கு பயிர்களின் வகைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு டாக்டர் பைஜு விளக்கமாக எடுத்துரைத்தார். தென்னையில் சந்திர சங்கரா என்ற மேம்படுத்தப்பட்ட வகை; மரவள்ளிக்கிழங்கில் ஸ்ரீ பவித்ரா, ஸ்ரீ ஜெயா மற்றும் ஸ்ரீ ரேக்ஷா; பூ சோனா (வைட்டமின் ஏ நிறைந்தது), பு கிருஷ்ணா (அந்தோசயனின் நிறைந்தது) மற்றும் ஸ்ரீ கனகா (வைட்டமின் ஏ நிறைந்தது) சர்க்கரைவள்ளி கிழங்கு; மரவள்ளிக்கிழங்கு மற்றும் சேனைக்கிழங்கு மைக்ரோனோல்; தென்னை மற்றும் கிழங்கு பயிர்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், தென்னை மற்றும் கிழங்கு பயிர்களின் வகைகள் மற்றும் தொழில்நுட்பங்களை பிரபலப் படுத்துவதற்காக விநியோகிக்கப்பட்டன.

கொச்சியின் தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்கள் மற்றும் தென்னையில் பூச்சி மற்றும் நோய் நிர்வாக முறைகள்ஆகிய இரண்டு வெளியீடுகளும் கருத்தரங்கில் வெளியிடப்பட்டன. நாட்டில் தோட்டக்கலை மேம்பாட்டிற்காக தென்னை தோட்டங்களில் பயிர் முறை அணுகுமுறைகளில் முன்னோடியாக திகழ்ந்தபத்து தென்னை விவசாயிகளும் பாராட்டப்பட்டனர்.

டாக்டர் எச்.ஹமீத் கான், முன்னாள் திட்ட ஒருங்கிணைப்பாளர், ஏஐசிஆர்பி (தென்னை – பனை வகைகள்), ஐ.சி. ஏ.ஆர்-சி.பி.சி.ஆர்.ஐ, காசர்கோடு மற்றும் சென்னை மண்டல அலுவலக இயக்குனர் இ.அரவாழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். ஸ்ரீமதி. வி.கிருஷ்ணவேணி (வேளாண்மை இணை இயக்குநர், திருப்பூர்), ஷீலா பூசலட்சுமி (வேளாண்மை இணை இயக்குனர், திருப்பூர்), டாக்டர் பி.சுப்பிரமணியன் (தலைவர், சிபிசிஆர்ஐ, காசர்கோடு) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஐசிஏஆர்-சிடிசிஆர்ஐ மூத்த விஞ்ஞானி மற்றும் கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர். து. ஜெகநாதன், கருத்தரங்கில் விருந்தினர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை வரவேற்றார். ஜி. ரகோத்தமன் (உதவி இயக்குநர் CDB, உடுமலைப்பேட்டை) நன்றி கூறினார்.

பல்வேறு தலைப்புகள், அதாவது நீர் மேலாண்மை மற்றும் தென்னை சார்ந்த பயிர்/விவசாய முறைகள்- குறித்து முனைவர் பி.சுப்ரமணியன் (தலைவர், பயிர் உற்பத்தித்துறை, ஐ.சி. ஏ.ஆர்-சி. பி.சி.ஆர்.ஐ, காசர்கோடு), கிழங்குபயிர்வகைகள், உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் மீள்தன்மைக்கான பயிர்/விவசாய முறைகள் -குறித்து முனைவர் து. ஜெகநாதன் (மூத்த விஞ்ஞானி, ஐ.சி. ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ, திருவனந்தபுரம்), தென்னையில் தாவர சுகாதார மேலாண்மைக்கான நல்ல விவசாய நடைமுறைகள் பற்றி -முனைவர் பி.ஏ.சரவணன் ( தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், பொங்கலூர், திருப்பூர்), தேங்காய் மதிப்பு கூட்டுதலில் தொழில் முனைவோர் வாய்ப்புகள்- பற்றி முனைவர் எம்.ஆர்.மணிகண்டன் (முதன்மை விஞ்ஞானி, ஐ.சி.ஏ.ஆர்-சி.பி.சி.ஆர்.ஐ, காசர்கோடு) பங்குதாரர்களை மேம்படுத்துதல், தென்னை வளர்ச்சி வாரியத்தின் மேம்பாட்டுத்திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து கு.ரகோத்தமன் (உதவி இயக்குனர், தென்னை வளர்ச்சி வாரியம்) ஆகியோர் எடுத்துரைத்தனர்.

மேலும் தமிழ்நாட்டில் தென்னை மற்றும் கிழங்கு பயிர்கள் சார்ந்த வேளாண் உணவு முறைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் செயல் திட்டத்தை கொண்டு வர பங்குதாரர்கள் இடையே விவாதத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிடிசிஆர்ஐ, சிபிசிஆர்ஐ, சிடிபி, கேவிகே, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, லிங்கா கெமிக்கல்ஸ், குளோபல் தேங்காய் எஃப்.பி.சி, மகிழம் தென்னை எஃப்.பி.சி ஆகிய ஒன்பது கண்காட்சி ஸ்டால்கள் கண்காட்சியில் பங்கேற்று விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கான வகைகள், தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் வெளியீடுகளைக் காட்சிப்படுத்தின. கருத்தரங்கில் சுமார் 300 விவசாயிகள் மற்றும் இதர பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img