fbpx
Homeபிற செய்திகள்பெருந்துறை அருகே வடமுகம் வெள்ளோடு ஊராட்சி அலுவலகம் திறப்பு

பெருந்துறை அருகே வடமுகம் வெள்ளோடு ஊராட்சி அலுவலகம் திறப்பு

பெருந்துறை அருகே வடமுகம் வெள்ளோடு ஊராட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட அலுவலகக் கட்டடத் திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் வாசுகி ஜெகநாதன் தலைமை வகித்தார்.

20 லட்சம் ரூபாய் செலவில் இந்த அலுவலகம் கட்டப்பட்டது. இது சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியாகும். இதன் மொத்த வருமானம் ஆண்டு ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய். இந்த ஆண்டு 13 கலைஞர் கனவு இல்லம் கட்ட மற்றும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 19 வீடுகளை சீரமைக்க நிதி கிடைத்தது.

நிகழ்ச்சியில் சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ் கர்பாபு, பாலமுருகன், தலைவர் காயத்திரி இளங்கோ, ஊராட்சி துணைத் தலைவர் சோம சுந்தரம், குமரவலசு ஊராட்சித் தலைவர் வி.பி.இளங்கோ, குட்டப்பாளையம் தலைவர் ரேணுகாதேவிகுமார், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img