fbpx
Homeபிற செய்திகள்வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பாளையம் மற்றும் வையப்பமலை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் உமா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், கோட்டபாளையம் ஊராட்சி, திருவேங்கடபுரம் மகேந்திரா நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு, இதன் மூலம் பயன்பெறும் குடியிருப்புகளின் எண்ணிக்கை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கோட்டபாளையத்தில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கோட்டப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு, குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம் விபரம், குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், வையப்பமலை சந்தை அருகில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img