மேட்டுப்பாளையம் நந்தவனம் பவானி ஆற்றங்கரையில் மான் இறைச்சி எடுத்துச்செல்லப்படுவதாக வனச்சரகர் ஜோசப் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஆறு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஆறு பேரையும் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கள் மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி (25), சுரேஷ் (29),நாசர் அலி(22),பாசித் அகமது(20),வினித் குமார்(21),முகமது ஆசாத்(22) என்பதும், கடந்த மே.3 ஆம் தேதி நான்கு நாய்கள் துரத்தியதில் புள்ளிமான் ஒன்று காயம்பட்டு இறந்த தும், அதனை மீட்டு இறைச்சியாக்கி சமைத்து சாப்பிட முயன்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து ஆறு பேரையும் கைது செய்த வனத்துறையினர் புள்ளி மானின் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.பின்,மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின் பெயரில் ரூ.50,000 அபராதம் விதித்து பின்னர் விடுவித்தனர்.



