நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டல வளாகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ துணை ஆணையாளர் செல்வசுரபி ராட்சத பலூனை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் உதவி ஆணையர் செந்தில் குமரன், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



