கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் பல்வேறு இடங்களில் தொடர் பிரச்சாரங்களை மேற் கொண்டு வருகிறார். அதே போல அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை டவுன்ஹால் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். முன்னதாக செல்வபுரம் பகுதியில் அண்ணாமலைக்கு கிரேன் மூலம் பாஜகவினர் பிரம்மாண்ட மாலையை அணிவித்தனர்.
அப்போது வானதி சீனிவாசன் பேசியதாவது:
பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர் அண்ணாமலையை கோவையின் உடைய வருங்கால வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கொடுத்துள்ளார். மூன்றாவது முறையாக பதவியேற்கின்ற பொழுது நம்முடைய ஊரின் உடைய பிர திநிதியாக நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அவர் பிரதமர் மோடி திட்டங்களை கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.
கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம் 2014ல் 2019 லே நாம் அத்தனை பேரும் கடுமையான உழைப்பை கொடுத்தும் கூட பிரதமர் மோடி அவர்களுக்கு கோவையின் உடைய எம்பியை நம்மால் கொடுக்க முடியவில்லை.
மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தான் ஆட்சி அமைக்க போகிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை.
ஒவ்வொரு வீட்டைக்கும் செல்வோம் ஒவ்வொரு நபருக்கும் செல்வோம் பத்தாண்டுகளாக சிறப் பாக ஆட்சி நடத்துகின்ற பிரதமர் மோடி அவர்களுடைய கரத்தை வலுப்படுத்த கோவையிலிருந்து நம் அன்பு சகோதரர் அண்ணாமலை தேர்ந்தெடுப்போம். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.கோவை பாஜகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை சின்னத்தை வெற்றி பெற செய்து அண்ணாமலை வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மக் கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:
பாஜகவிற்கு பதிவு செய்யக்கூடிய வாக்கு சதவீதத்தை அதிகளவில் இங்கு கொடுப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் இருக்க கூடிய பகுதி மிக முக்கியமான பகுதி, காரணம் இந்தியாவினுடைய மிக முக்கியமான நம்முடைய எல்லா தொழிலும் கூட நடக்கின்ற பகுதி.
நகை தொழிலாளராக இருக்கட் டும், அந்த நகை சம்பந்தப்பட்ட எல்லா நுணுக்கமான வேலைக ளாக நடக்கும் இடம். இந்த பகுதியை தென்னிந்தியாவினு டைய மேன்செஸ்டர் என்று சொல்லுவோம். அப்படிப்பட்ட அற்புதமான இடத்தில் நின்று கொண்டிருக்கின்றோம்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுதினமும் கூட மக்களை எப்படி மேம்படுத்த வேண்டும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக திட்டங்களை கொடுத் துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது முறை பிரதமர்400 பாராளுமன்ற உறுப்பினர்களை தாண்டி வருவார்.
கோவையை ஒரு சிறப்பு பொ ருளாதார மண்டலமாக நகை உற்பத்தியை பொறுத்தவரை கொண்டு வருவதற்கான எல்லா முயற்சியும் எடுப்போம்.
எல்லா தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூட இந்த நேரத்திலே நாங்கள் சொல்லிக் கொள்கின்றோம். நம்முடைய தேர்தல் அறிக்கையிலும் கூட இருக் கும். ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக கோவையை அறிவிக்க வேண்டும் என்பது தான். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.



