Homeபிற செய்திகள்கொங்கு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கொங்கு கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 77 பல்கலைக்கழக ரேங்க் தகுதி பெற்ற பட்டதாரி உட்பட 1493 பட்டதாரிகளுக்கு பாரதியார் பல்கலைக் கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் பொன் பாண்டியன் பட்டங்களை வழங்கினார்.

அவர் தனது உரையில், பட்டதாரிகள் தங்கள் கல்வியை சமுதாய முன் னேற்றத்திற்காகவும், தங்கள் தனித்துவமான திறன்களை மேம்படுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தேசத்தின் எதிர்காலம் அவர்கள் கையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

கல்லூரி அறக்கட்டளை தலைவர் ஆர்.குமாரசாமி, தாளாளர் பி.டி.தங்கவேல், அறங்காவலர் பி.சச்சிதானந்தம், முதல்வர் டாக்டர் எச்.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img