கோவை, அவிநாசி சாலை, அரசூரில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “தேசிய கணித வார விழா” நடைபெற்றது.
கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜனை போற்றும் வகையில் கல்லூரியின் கணிதத் துறை சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், ஸ்ரீனிவாச ராமானுஜன் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறப்புப் பார்வை, திரைப்படம், ஓவியப் போட்டி, கணிதத்தில் புதுமையான யோசனைகள் குறித்த விளக்கக் காட்சிகள், வினாடி-வினா போட்டி, வேதக் கணிதப் பயிற்சிகள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் மாணவர்களுக்கு ராமானுஜன் வாழ்க்கைப் பற்றியும் அவரது பணி குறித்தும் பல தகவல்களை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் ராமசாமி, கணித மேதை ராமானுஜன் கண்டுபிடிப்புகள், கணித துறைக்கு அவர் ஆற்றிய பங்கு குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.