ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியின் 14-ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி டி.சம்பத், கல்லூரி செயலர்கள் திருமூர்த்தி, நந்தகுமார் பிரதீப், முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், பள்ளி முதல்வர் ஏ.ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



