தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்து இருப்பதால் பேங்க் ஆப் மகாராஷ்டிரா சிறு குறு தொழில்களுக்கு அதிக கடன்களை வழங்கி வருவதாக வங்கியின் நிர் வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஏ.எஸ்.ராஜீவ் தெரிவித்துள்ளார்
பேங்க் ஆப் மகாராஷ்டிரா அதிநவீன தொழில்நுட்ப வசதிகளு டன் சென்னைக்கு அடுத்தபடியாக புதிய மண்டல அலுவலகத்தை கோவை சிவானந்தா காலனி ராஜூ நாயுடு சாலை எஸ்எம்டி டவர்ஸ் முதல் தளத்தில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எஸ்.ராஜீவ் நேற்று திறந்து வைத்து வங்கியின் செயல்பாடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் மகாராஷ்டிரா நாடு முழுவதும் 2400 கிளைகள் மூலம் 27 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்தில் சேவை செய்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்த வரை, 80 கிளைகள் தற்போது செயல்படுகிறது. விரைவில் இன்னும் கூடுதலாக 20 கிளைகளை துவக்கப்பட உள்ளது. வங்கியின் வணிகத்தை பொறுத்த மட்டில் சென்னை மண்டலத்தில் 20,000 கோடி வர்த்தகம் மேற்கொள் ளப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தில் மூவா யிரம் கோடி என மொத்தம் 23,000 கோடி ரூபாய் வணிகம் நடை பெறுகிறது. அடுத்த கட்டமாக தமிழகத்தில் இந்த வணிகத்தை முப்பதாயிரம் கோடி ரூபாயாக அதிகரிப்பதே எங்கள் இலக்கு.
தொழில் வளர்ச்சியில் கோவை வேகமாக வளர்ந்து வருவதால், இங்கு மண்டல அலு வலகம் துவங்கப்பட்டுள்ளது. இந்தி யாவிலேயே முன்னணி மாநிலமான தமிழகத்தில் ஜி.டி.பி. வளர்ச்சி நன்றாக இருக்கிறது.
சிறு குறு தொழில்களை பொறுத்த வரை ஆயிரத்தி இருநூறு கோடி அளவில் கோவையில் வணிகம் நடக்கிறது. கோவையில் தொழில் வளர்ச்சி அடைந்து வருவதால் மூவாயிரம் கோடி ரூபாயாக அதிகப்படுத்த உள்ளோம்.
இந்தியாவிலேயே சிறு குறு தொழில்கள் வளர்ச்சியில் தமிழகம் முதன்மையாக இருப்பதால் சிறு குறு கடன்களில் தங்களது வங்கி தமிழ கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மண்டல மேலாளர் ஷிபு ஜேக்கப், துணை மண்டல மேலாளர் ராஜூ ஆகியோர் உடனிருந்தனர். கோவை மண்டலத்தின் கீழ் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் அனைத்து கிளைகளும் அனைத்து அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளையும் வாடிக்கையாளர்களின் தேவைகளை யும் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
மேலும் தனது வாடிக்கையாளர் சேவையை சீரான மற்றும் சரியான நேரத்தில் வழங்குகிறது. கடன் விநியோகத்தை மேம்படுத்துதல் மற்றும் சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் சிறுகுறு தொழில் துறைகளில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் குறைந்த நேரத்தில் சேவை வழங்குகிறது.
ஏடிஎம் கம் டெபிட் கார்டு, பாதுகாப்பான இணைய வங்கிச் சேவை, வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணிநேர வாடிக்கையாளர் பராமரிப்பு மையம் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற பல்வேறு தனித்துவமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.



