70 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 4732- பயனாளிகளுக்கு ரூ.36.51 கோடி அளவில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில். 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 4732 பயனாளிகளுக்கு ரூ.36.51 கோடி அளவில் நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவு தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற 16 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், 28 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களும், 2 கூட்டுறவு சங்கங்களுக்கு வேளாண் உட்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான டிராக்டர்கள் மற்றும் 2 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமண ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ண ராயபுரம்), ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: 70 ஆவது கூட்டுறவு வார விழாவை சிறப்பாக கொண்டாடும் இவ்வேளையில், கூட்டுறவு அமைப்புகள் என்றென்றும் வெற்றி அடைய வேண்டும். இந்த வெற்றியைத் தேடி நடத்திக் கொண்டிருக்கின்ற கூட்டுறவு சங்கங்களில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதன்முதலாக கூட்டுறவு வேளாண்மை துறைக்கு என்று ஆரம்பிக்கப்பட்டது. உதவி செய்யக்கூடிய வகையில் மானியம் மற்றும் கடனுதவிகள் கொடுப்பதற்காக இயங்கிக் கொண்டிருந்தது. பின்னர், நகை கடன்கள் வழங்கி வருகிறது.
கூட்டுறவுத் துறை மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொண்டு வருவதை பார்த்தால் ஒரு பொது கூட்டுறவு நிறுவனமானது பல்வேறு துறைகளுக்கு உதவி செய்ய க்கூடிய சூழ்நிலையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. கூட்டுறவு சங்கங்களின் மூலம் இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட வங்கிகள் மூலம் பள்ளிப்படிப்பு மற்றும் மேல்படிப்பு படிப்பதற்காக கல்வி கடன் உதவிகளும் வழங்கி வருகின்றது.
பிற்படுத்த ப்பட்டோர் நலத்துறையின் மூலம் டாம் செட் கோ என்ற கடன் வழங்கி வருகின்றது. சிறுபான்மையினர் நலத்துறை மூலம் கடன் உதவிகள் வழங்கி வருகின்றனர்.
மாவட்ட தொழில் மையம் மூலமாக பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு கடன் உதவிகள் வழங்கி வருகின்றார்கள். இதைத் தவிர கூட்டுறவு துறையின் மூலம் பல்வேறு நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் யாரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கக் கூடிய துறையாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
மேலும், தமிழக முதலமைச்சர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகின்றது. கூட்டுறவுத் துறையின் மூலமாக இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
கூட்டுறவு துறையின் பணியாளர்கள், அலுவலர்கள், வெற்றி கரமாக நடத்திக் கொண்டிருக்கின்ற அ¬ னவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்,சுய உதவி குழுக்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக உங்களுக்கு தேவையான கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் மதிப்பில் 1384- பயனாளிகளுக்கு இந்தக் கூட்டுறவு வங்கியின் மூலம் வழங்கி உள்ளனர்.
விவசாயமும் விவசாயம் சார்ந்த வேளாண் உற்பத்தி துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற துறைகள் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கூட்டுறவுத் துறையின் மூலம் கூட்டுறவு மருந்தகம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை வழங்கி வருகின்றது.
கூட்டுறவுத் துறையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் பொதுமக்கள் மற்றும் உறுப்பினராகிய நீங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூட்டுறவு முலம் நீங்கள் பெறக்கூடிய கடனுதவிகளை முறையாக நீங்கள் கூட்டுறவு துறைக்கு செலுத்தும்போது உங்கள் இரு தரப்பினருக்கும் தொடர்ச்சியான வளர்ச்சி மேம்படுவதற்கான உதவிய £க இருக்கும் என்றும், தமிழக முதலமைச்சர் பொதுமக்களுக்கு நகை கடன்கள் தள்ளுபடி செய்தார்கள்.
அதேபோல் கூட்டுறவு மூலம் பெறக்கூடிய கடன் உதவி களை நீங்கள் பெற்றுக் கொண்டும் பயன்பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.
இவ்விழாவில், கரூர் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா, கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விறபனை சங்க செயலாட்சியர் அபிராமி, கரூர் சரக துணைப்ப திவாளர் ஆறுமுகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு துறையின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



