உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறை முகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் முதலுதவி மையத்தை திறந்து வைத்து, ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
மேலும், மீனவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தனித் திறன் போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் கடலுக்குச் செல்லும் விசைப்படகு தொழிலாளர்கள் 2500 பேருக்கு மழை கோட்டுகளை தனது சொந்த பொறுப்பில் வழங்கினார்.
அதோடு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கி உரையாற்றினார்.
விழாவிற்கு மாவட்ட விசைப் படகு தொழிலாளர் சங்க தலைவர் தர்மபிச்சை தலைமை வைத்தார். செயலாளர் ஜவகர் முன்னிலை வகித்தார். ஆலோசகர் சுஜீத் வரவேற்றார்.
விழாவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் விஜய ராகவன், நெய்தல் அண்டோ,
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டா லின், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநகர மீன வரணி அமைப்பாளர் டேனியல், தொழிலதிபர் பழரசம் பால்ராஜ், பேராசிரியை பாத்திமா பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கத் துணைச் செயலாளர் சண்முக சுந்தர ராஜா நன்றி கூறினார்.