fbpx
Homeபிற செய்திகள்ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் டவுன்டவுன் சார்பில் ஏழைகளுக்கு இலவச மூட்டு வலி அறுவை சிகிச்சை

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் டவுன்டவுன் சார்பில் ஏழைகளுக்கு இலவச மூட்டு வலி அறுவை சிகிச்சை

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் டவுன்டவுன் சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள 30 பேருக்கு ரூ.40 லட்சம் செலவில் மூட்டு வலி அறுவை சிகிச்சைக்கு உதவும் ஆர்சிடி லிம்ப் 2 ரன் திட்ட தொடக்க விழா, கோவை, காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நேற்று நடைபெற்றது.

ரோட்டரி மாவட்ட ஆளுநர் விஜயகுமார், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். விஜிஎம் மருத்துவமனை தலைவர் வி.ஜி.மோகன் பிரசாத், ரோட்டரி சங்க தலைவர் மோகன்ராஜ், செயலாளர் குகன், பொருளாளர் விக்னேஷ், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்சிடி லிம்ப் 2 ரன் திட்டம் குறித்து அதன் தலைவர் ஏ.காட்வின் கூறியதாவது:
ரோட்டரி கிளப் ஆப் கோயமுத் தூர் டவுன்டவுன் பல ஆண்டுகளாக பின்தங்கிய மக்களுக்காக செயல் பட்டு வரும் ஒரு அமைப்பாக உள்ளது.

அதன்படி ஆர்சிடி லிம்ப் 2 ரன் திட்டத்தின் கீழ், மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள், மூட்டு வலியால் அவதிப்படும் நிதி வசதியற்றவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.

ரூ.40 லட்சம் மதிப்புள்ள இத்திட்டம், சர்வதேச நிதியில் பெறப்படும் இரண்டாவது திட்டம் ஆகும். கோவை விஜிஎம் மருத்துவமனையில் டாக்டர் சுமன், அவரது குழுவின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முதல் பயனாளியான அன்னூரை சேர்ந்த கபடி வீரரும், வெல்டிங் தொழிலாளியுமான ராஜதுரை அறுவை சிகிச்சைக்கு பின் நடக்க துவங்கியுள்ளார். இந்த சிகிச்சை 30 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

இதில் பயன்பெற விரும்புபவர்கள், முதலில் தங்களது செலவில் முழங்கால் மூட்டில் ஏற்பட்டுள்ள சவ்வு கிழிப்பை ஸ்கேன் செய்து, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் டவுன்டவுனை அணுக வேண்டும்.

அதன் பிறகு விஜிஎம் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு, ஏழ்மை நிலையில் உள்ளவரா என்ற விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பின் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

ரோட்டரி கவர்னர் ராஜ்மோன் நாயர், செல்லா ஆகியோரின் ஒப்புதலுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img