fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் ‘அக்னிடோ 2023’ விருது வழங்கும் விழா

சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் ‘அக்னிடோ 2023’ விருது வழங்கும் விழா

சென்னை சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் ‘அக்னிடோ 2023’ எனும் வருடாந்திர விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விருதுகள் சிறப்பான அர்ப்பணிப்பு, கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியில் சிறந்த மாணவர்கள், பேராசிரியர்கள், கல் லூரி பணியாளர்கள், ஆராய்ச்சி அறிஞர்களின் சாதனைகளை பாராட்டி வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை தொலைத்தொடர்பு துறை துணை இயக்குநர் ஜெனரல் சுதாகர், மியான்மர் நாட்டின் கவுரவ தூதர் பேராசிரியர் ரங்கநாதன், கோனே எலிவேட்டர் இந்தியா நிறுவனத்தின் மனிதவள சிறப்பு நிபுணர் பொன்னுசாமி, மக்கள் தொடர்பு மனிதவள பொது மேலாளர் ஆறுமுகம், ஆல்செக் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் மனித வள துணைப் பொது மேலாளர் அருள் ஆகியோர் பங்கேற்று 750க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கினர்.

சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் 18 ஆராய்ச்சி குழுக்களில் 2 சதவீத விஞ்ஞானிகளை கொண்டி ருக்கிறது. இவர்கள் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி திட்டங்களுக்கும் தலைமை தாங்கியுள்ளனர்.

வளர்ச்சி, புதுமை மற்றும் ஆராய்ச்சித் துறையில் அதிக கவனம் செலுத்தி வரும் சிமாட்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியின் செயல்பாடுகளுக்கு சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் பாராட்டு தெரிவித்தார்.

கல்லூரியின் இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக் கூறுகையில், “ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நிபுணத்துவமிக்க பேராசிரியர்கள், அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் எங்களிடம் உள்ளன. பொறியியல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

விருது வழங்கும் விழாவில் கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள், மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img