கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டதை முடக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர தலைவர் எம்தங்கமணி, எஸ்சி-எஸ்டி பிரிவு மாநில துணை தலைவர் கே.காந்தி, முன்னாள் தலைவர் மீனாஹரிராமலிங்கம் , மாவட்ட செயலாளர்கள் மருதுர் ரங்கராஜ், ரஹமதுல்ல, கே.கே. சுப்பிரமணியம், மாவட்ட தகவல் அறியும் சட்ட துறை தலைவர் ஜி.இமாலயா, கவுன்சிலர்கள் கவிதா, புருஷோத்தமன், காரமடை நகர துணை தலைவர் மல்லிகா, துறை சிறுமுகை ரங்கராஜ், கணேஷ், முன்னாள் நகரமன்ற தலைவர் சத்தியாவதி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



