தூத்துக்குடி, பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி உள்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை, மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் நவின தொழில்நுட்ப கற்பித்தல் உத்திகளை கையாளும் சிறந்த பள்ளிகளை மாவட்டத்திற்கு மூன்று பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியும் ஒன்றாகும்.
சிறந்த பள்ளிக்கான விருதை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் வழங்கினார்.
பள்ளிக்கு வழங்கிய விருதினை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயபாலன் துரைராஜ் தேவாசீர், தலைமையாசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ், ஆசிரியை பெல்சிபாய் மற்றும் இன்பமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்று பள்ளிக்கு வருகை தந்த தலைமையாசிரியருக்கு பள்ளி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊர் தலைவர் அமர்நாத், காசிபாண்டியன், வெற்றிவேல், முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் திரவியராஜ், தனலெட்சுமி, ஆரோக்கியராஜ். கமிட்டி அங்கத்தினர் கனிஷ்டன், பொன்ராஜ், ஐசக் ஜெயக்குமார் மற்றும் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஊரின் பள்ளியை பெருமைப்படுத்தியமைக்கு தலைமையாசிரியர் மற்றும் தமிழக அரசுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.