கோவை மாவட்டத்தில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று தொடங்கியது. இதன் முதல் நாள் நிகழ்ச்சி நேற்று 14ம் தேதி கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து கூட்டுறவு வாரவிழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) கே.ஆர்.ராஜேந்திரன் கூட்டுறவு உறுதி மொழி வாசிக்க கூட்டுறவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் துடியலூர் விவசாய சேவா ஸ்தாபன இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான சிவக்குமார் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கா.இரா.விஜய கணேஷ் கோவை சரகம் கூட்டுறவு சங்கங்களின்
துணைப்பதிவாளர் கோபாலகிருஷ்ணன், பொள்ளாச்சி சரகம் மற்றும்
கோவை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குனரும் செயலாட்சியருமான தா. முத்துக்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்–.



