fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கரூரில், அரசு காலனி பேருந்து நிறுத்தம் அருகே, மகாகவி மாற்றுத்திறனா ளிகள் பாதுகாப்பு நலச்சங் கம் மற்றும் மாநில அமைப்பு மாற்றுத்தி றனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத் தில் நீண்ட கால கோரிக் கையாக உள்ள மூன்று அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மகாகவி மாற்றுத்திறனா ளிகள் சங்க மாவட்டத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் குடியிருப்பு பகுதியான தமிழ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் சாய்வு தள வசதியுடன் ரேம்ப் வசதி அமைத்து வழங்கிட வேண்டும்.

இந்த வாரியத்தில் கரூர் மாவட்ட வாரியத்தின் நிர் வாக கமிட்டி குழுவில் மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள் ஆலோசனை குழுவில் மகாகவி மாற் றுத்திறனாளிகள் நலச் சங்க ஆண்,பெண் உறுப்பினர் களை சேர்க்க வேண்டும்.

“குடியிருப்பு நமது பொறுப்பு” வாரியத்தில் தேர்வு செய்யும் சங்கத் தேர்தலை முறையாக நடத்தி உரிய இட ஒதுக்கீடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும், தமிழ் நகர் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் பெட்டிக்கடை வைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த விண்ணப்பம் வழங்கிய மாற்றுத்திறனா ளிகளுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப் பினர்.

படிக்க வேண்டும்

spot_img