fbpx
Homeபிற செய்திகள்13 ஆண்டுகளுக்குப் பின் என்.எல்.சி. பங்கு மதிப்பு உயர்வு

13 ஆண்டுகளுக்குப் பின் என்.எல்.சி. பங்கு மதிப்பு உயர்வு

13 ஆண்டுகளுக்கு பிறகு என்.எல்.சி.பங்கு மதிப்பு உயர்ந்துள்ளதாக அதன் தலைவர் பிரசன்னகு மார் மோட்டுப்பள்ளி தெரிவித்தார். என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் ஊழல் ஒழிப்பு குறித்த கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கடந்த 30.10.2023 முதல் 5.11.2023 வரை நடந்தது.

நிறைவு விழாவுக்கு என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்னகுமார் மோட்டுப் பள்ளி தலைமை தாங்கி பேசியதாவது: என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை மதிப்பு கடந்த 13 ஆண்டு களை விட உயர்ந்துள்ளது. தற்போது ஒரு பங்கின் விலை மதிப்பு ரூ.150 என்ற அளவில் உள்ளது.

இந்த நிலையை அடைந்திடக் காரண மாக திகழும் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர் களையும் பாராட்டுகி றேன்.
முக்கிய மதிப்புக ளான வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பு
டைமை ஆகியவற்றின் வாயிலாக நிறுவனம் மென்மேலும் அடைகிறது.

கண்காணிப்புத்துறையின் சிறந்த நடவடிக்கைகளுக் காக நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்க ளில் 5-ம் இடத்தை என்.எல்.சி. இந்தியா நிறு வனம் பிடித்தது என்றார்.

நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத் துறை இயக்குநர் மோகன், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பா கண்ணு கோவிந்தராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கண்காணிப்புத்துறை பொதுமேலாளர் அசோக் கோட்டே வரவேற்றார்.
கண்காணிப்பு வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கண்காணிப்புத் துறை சார்பில் “கண்காணிக்கும் கண்கள்” எனும் செய்தி மலர் மின்னனு வடிவத்தில் வெளியிடப்பட்டது. கண்காணிப்புத் துறை தலைமை பொதுமேலாளர் இரணியன் நன்றி கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img