fbpx
Homeபிற செய்திகள்ஆர்ய வைத்யா பார்மசி சார்பில் 12 புதிய ஆரோக்கிய தயாரிப்புகள் அறிமுகம்

ஆர்ய வைத்யா பார்மசி சார்பில் 12 புதிய ஆரோக்கிய தயாரிப்புகள் அறிமுகம்

முன்னணி ஆயுர்வேத நிறுவனமான ஆர்ய வைத்யா பார்மசி (கோயம்புத்தூர்) லிமிடெட் (ஏவிபி) புதிதாக 12 வகையான ஆரோக்கிய தயாரிப்புகளை அறிமுகப்ப டுத்தியுள்ளது.
இதுகுறித்து ஏவிபி நிர்வாக இயக்குநர் தேவிதாஸ் வாரியர் கூறியதாவது:

ஆயுர்வேதம் மக்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும் சக்தி கொண்டது. புதுமையான தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலம், உண்மையான ஆயுர் வேதத்தின் பலன்களை மக்கள் தினசரி அனுபவிப்பதை எளிதாக்குகிறோம்.

ஏவிபி-ன் நுகர்வோர் வணிகப்பிரிவு, நோய் எதிர்ப்பு சக்தி, வலி ​​நிவாரணம், தோல், முகம், முடி பராமரிப்பு மற்றும் செரிமானப் பிரச்னைகளை நிவர்த்தி செய்யும் 12 ஆரோக்கிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் இந்தியாவின் பழமையான ஆயுர்வேத மருத்துவ முறைகளின் அடிப்படையில் உள்ளன என்றார்.

தலைமை நிர்வாக அதிகாரி விபின் விஜய் கூறுகையில், “எங்கள் புதிய நுகர்வோர் வணிகப்பிரிவு, ஆயுர்வேதத்தின் பலன்களை அனைத்து மக்களும் அணுகக்கூடியதாக மாற்றும். இந்த தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவும்” என்றார்.

கோவை ஆர்ய வைத்யா பார்மசி ரிசர்ச் பவுண்டேஷனில் நடைபெற்ற விழாவில் இந்த தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img