fbpx
Homeபிற செய்திகள்அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல் கல்வி மதிப்பீடு பட்டய படிப்பு சேர்க்கை துவக்கம்

அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல் கல்வி மதிப்பீடு பட்டய படிப்பு சேர்க்கை துவக்கம்

பெங்களூருவில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல் கல்வி மதிப்பீடு பட்டய (டிப்ளமோ) படிப்புக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.

ஓராண்டு பகுதி நேர பட்டய படிப்பாக பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் வகுப்பறையில் கற்பது போன்ற வகையில் பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட் டுள்ளன.
திட்டமிடல், வடிவாக்கம், மதிப்பீடு அளவுகோல் ஆகியவற்றில் புதிய உத்திகளைக் கையாள வழிவகுக்கும் விதமாக பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட் டுள்ளன.

இதில் சேர்வதற்கும், மேலும் தகவல்கள், விளக்கம், தகுதி மற்றும் கட்டண விவரங்களை https://azimpremjiuniversity.edu.in/pgd-ea> என்ற இணையதளம் மூலமும், 8951978091 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் இந்து பிரசாத் கூறுகையில், கல்வி சார்ந்த பணியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் உடையவர்கள், ஆசிரியர்கள், கல்வி சார்ந்த ஒருங்கிணைப்பில் ஈடுபட்டுள்ளவர் கள், கற்பித்தலில் உள்ள கல்வியாளர்கள், பாடநூல் திட்ட வடிவமைப்பாளர் கள், தேர்வுத்தாள் வடிவமைப்பவர் கள், பள்ளி கல்லூரிகளுக்கான பாட நூல்களை எழுதுவோர், தன்னலமற்ற சேவை புரியும் தொழில் பிரிவினர் ஆகியோருக்கு இது ஏற்றது என்றார்.

இப்படிப்பில் சேர வரும் நவம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், நேர்காணல் நவம்பர், டிசம்பரில் நடைபெறும். வகுப்புகள் 2024 பிப்ரவரி 5ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img