மேட்டுப்பாளையம் விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் சேர்க்கை நடைபெற்றது. பள்ளித் தாளா ளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.
பள்ளி நிர்வாக அதிகாரி நிர்மலா தேவி குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கிவைத்தார். பள்ளி முதல்வர் சர்லின், அறங்காவலர் விஷ்வநாத் முன்னிலை வகித்தனர்.
வித்யாகணபதி பூஜையுடன் குழந்தைகளின் விரல்களை பிடித்து, ஓம் மந்திரம், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள், எண்களை நெல், மஞ்சள் அரிசிகளில் எழுதப்பட்டது.
தொடர்ந்து, குழந்தைகள் வகுப்பறையில் அமர்ந்து கதைகள், பாடல்கள் கேட்டு மகிழ்ந்தனர்.