Homeபிற செய்திகள்வேலு நாச்சியாரின் படைத் தளபதி குயிலி 243-வது நினைவு நாள் அனுசரிப்பு

வேலு நாச்சியாரின் படைத் தளபதி குயிலி 243-வது நினைவு நாள் அனுசரிப்பு

அருந்ததியர் சமூக அறக்கட்டளை சார்பில் முதல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற வீர தளபதி சிவகங்கை சீமையின் ராணி வேலுநாச்சியாரின் போர்படை தளபதி வீரத்தாய் குயிலியின் 243வது நினைவு நாள் கோவை பேரூரில் உள்ள அருந்ததியர் சமூக மடத்தில் இன்று காலை அனுசரிக்கப்பட்டது. போர்ப்படை தளபதி குயிலியின் திருவருப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் சி.சுந்தர் தலைமை வகித்தார். செயலாளர் சி. செந்தில் குமார் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் பி. பழனிசாமி, அறங்காவலர் டி.திருமலைசாமி, சட்ட ஆலோசகர் எஸ்.சுமதி, கவுரவ ஆலோசகர் வி.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைத் தலைவர் எஸ். செல்வகுமார் துவக்கவுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, வடக்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் , தி.மு.க. ஆதி திராவிடர் அணி தலைவர் வேலுசாமி, அறங்காவலர் கே. மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img