கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் (கொசினா) சார்பில் இந்திய பொறியாளர்கள் தின கொண்டாடப்பட்டது.
கோவை கே.பி.ஆர். தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் எம்.ராமசாமி, கொசினா தலைவர் ஆர்.ராமகிருஷ்ணன், செயலாளர் டி.சேகர், பொருளாளர் ஆர்.மாசிலாமணி, முன்னாள் தலைவர் டி.குருபிரசாத், மாணவர் பிரிவு தலைவர் எம்.கே.ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவை ஒட்டி, கல்லூரி மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் விநாடி வினா போட்டியை நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கொசினா சார்பில் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விநாடி வினா மாஸ்டர் ஐ.எஸ்.என்.செல்வராஜ் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி போட்டியை சிறப்பாக நடத்தினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.



