கோவை மாவட்ட ஆயிர வைசிய சங்கத் தலைவர்அரிமா முத்து ஆர் பழனிச்சாமி, இளைஞர் அணி தலைவர் மணிகண்டேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
அப்போது விருதுநகர் ஏ.வி.கே.சி மகாசபைக்கு சென்றனர். அங்கு அவர்களை மகா சபை செயலாளர் பி. நாகேஷ், பொருளாளர் சத்யநாராயணன், நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேந்திர குமார் மற் றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து சங்க நடவடிக்கைகள் நலத்திட்ட உதவிகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது கூடியிருந்த நிர்வாகிகள் அனைவரும் ஆயிர வைசியர் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.



