தகவல் அறியும் உரிமைச்சட்டம் விழிப்புணர்வு வாரத்தையொட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சேலம் மண்டல அலுவலகம் சார்பில் இன்று (10ம் தேதி) காலை சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையிலிருந்து துணை மண்டல மேலாளர் பொ.ரவி விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
இதில் மண்டல அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.