fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு

கோவையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சி: ஆட்சியர், ஆணையர் பங்கேற்பு

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை தாமஸ் பார்க் டவர் பகுதியில் நடைபெற்றது.

அதையொட்டி அந்த பகுதி முழுவதும் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கோவை கே.எம்.சி.எச் .மருத்து வமனையின் துணைத் தலைவர் தவமணி தேவி பழனிசாமி, நிர்வாக இயக்குனர் அருண் பழனி சாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், காவல்துறை இணை ஆணையர் சந்தீஷ் ஆகியோர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

இந்த புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி கோவை பந்தய சாலை மீடியா டவர் முழுவதும் பிங்க் நிற ஒளியால் ஒளிரச் செய்யப்பட்டது.

மார்பக புற்றுநோயை வெற்றி கொள்வதில் எடுத்து வரும் முயற்சிகளுக்கும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் அடையாளமாகவும் பிங்க் வண்ணம் இருப்பதால் உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை பிங்க் மாதமாக அறிவித்துள்ளது.

அந்த வகையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பந்தய சாலை முழுவதும் பிங்க் வண்ணத்தால் ஒளிர செய்யப்பட்டதால் பொதுமக்கள் பரவசத்துடன் அதனை கண்டு ரசித்தனர்.

இதுகுறித்து, “மார்பக புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் இல்லை எனவும் அதற்கான அதிநவீன மருத்துவ சிகிச்சைகள் தங்களது மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக மருத்துவமனையின் துணை தலை வர் தவமணி தேவி பழனிசாமி தெரி வித்துள்ளார்.

விழாவில் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், திரைப்பட இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img