fbpx
Homeபிற செய்திகள்கோவை மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி, ஜனதா நகர், காந்தி வீதியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாமன்ற உறுப்பினர் பழனிசாமி (எ) சிரவை சிவா, உதவி ஆணையர் நூர் அகமது, செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img