இந்தியாவில் யுபிஎஸ் (UPS) நிறுவனம், அதன் முதல் தொழில்நுட்ப மையத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் தங்கள் தொழிலை எளிதாக மேற்கொள்ள உதவும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் இந்த புதிய மையமானது கவனம் செலுத்தும். மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி ராஜா, யுபிஎஸ் நிறுவனத்தின் துணை செயல் தலைவர் (EVP) பாலா சுப்ரமணியன் மற்றும் யுபிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வளத்துறை அலுவலரும், ஈக்விட்டி மற்றும் இன்க்ளூஷன் அலுவலருமாகிய டேரல் ஃபோர்டு ஆகியோரும் உடனிருந்தனர்.
ஆண்டின் முற்பகுதியில், இந்தியா வில் $15-20 மில்லியன் டாலர் மதிப் பிலான அறிவுசார் முதலீட்டை மேற்கொள்ளப் போவதாக யுபிஎஸ் நிறுவனம் அறிவித்திருந்தது, இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற் கனவே இருக்கும் அதன் தொழில்நுட்ப அணிகளுக்கு கூடுதல் ஆதரவினை வழங்க வழிவகுக்கப்படும்.
சென்னையின் பூந்தமல்லி சாலையில் இந்த முதல் மையம் 51,000 சதுரடி பரப்ப ளவினை கொண்டதாகும். இந்தியாவில் யுபிஎஸ் டெக்னாலஜி சென்டர்களின் துணை தலைவராக இருந்து டாக்டர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் மையத்தை வழிநடத்துவார்.
சென்னையில் ஏற்கனவே சுமார் 100 திறமைசாலிகள் மையத்திற்காக பணியமர்த்தப்பட்டுள்ள நிலையில், 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 350 நபர்களும், 2025-ம் ஆண்டுக்குள் 1000 நபர்கள் வரையிலும் பணியமர்த்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
வெறும் வேலைவாய்ப்புகளை மட்டும் வழங்காமல், குறிப்பாக பெண்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களுக்கு பணிசார்ந்த வாழ்வியல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் யுபிஎஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மையங்கள் உறுதியாக உள்ளன.



