fbpx
Homeபிற செய்திகள்கரூரில் தண்ணீர் சேமிப்பு, நீர் நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூரில் தண்ணீர் சேமிப்பு, நீர் நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூரில், தண்ணீர் சேமிப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு குறித்து தனியார் பள்ளி மாணவ- மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

‘தண்ணீர் சேமிப்பு’ மற்றும் வாழ்வின் ஆதாரமான ‘நீர்நிலைகளை பாதுகாப்பதன்’ அவசியம் குறித்து கரூரில் செயல்படும் வேலம்மாள் வித்யாலயா தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற பேரணியை கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக நீரைச் சேமிப்பதன் அவசியம்,நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகளின் பாதுகாப்பு குறித்தும்,ஒவ்வொரு துளி நீரின் முக்கியம், அதற்கு நமது ஒவ்வொருவரது பங்களிப்பும், அவசியம் குறித்து வலியுறுத்தும் தெரு நாடகம் நடைபெற்றது.

தொடந்து பேரணியில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் நீரின் அவசியம் குறித்தும்,எவ்வாறு நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், நீரை பாதுகாக்க வேண்டியதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

500-க்கு மேற்பட்ட மாணவ- மாணவியர் கலந்து கொண்ட பேரணியானது கரூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி, மாநகர் பகுதியில் முக்கிய பகுதியான ஜவகர் பஜார் வழியாக சென்று நகர காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

படிக்க வேண்டும்

spot_img