fbpx
Homeபிற செய்திகள்300 கண் மருத்துவமனைக் குழுமமாக விரிவடையும் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர்

300 கண் மருத்துவமனைக் குழுமமாக விரிவடையும் டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர்

டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட் (DAHCL) அதன் தற்போதைய முதலீட்டாளர்களான ‘டிபிஜி குரோத்’, ‘டெமாசெக்’ ஆகியவற் றிடமிருந்து ரூ. 650 கோடி நிதியை திரட்டியிருக்கிறது.

டாக்டர் அகர்வால்ஸ்-ன் விரிவாக்க திட்டங்களுக்கு தேவையான மூலதனத்தை இந்த நிதி திரட்டல் சுற்று வழங்கும். 150+ மையங்கள் என்ற தற்போதைய அளவை அடுத்த 3 ஆண்டுகளில் 300+ மையங்களாக விரிவுபடுத்த இம்மூலதனம் பயன்படுத்தப்படும்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் அமர் அகர்வால் கூறியதாவது:

மிகச்சிறப்பான கண் பராமரிப்புக்கு சமீபத்திய, நவீன தொழில்நுட்பங்களை பெறுவதற்கும் இந்தியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் எமது செயல்பாடுகளை மேலும் விரிவாக்கவும் இப்புதிய முதலீடு பயன்படுத்தப்படும் என்றார்.

டிபிஜி குரோத் நிறுவனத்தின் பிசினஸ் யூனிட் பார்ட்னர் அங்கூர் ததானி கூறும்போது, கண் சிகிச்சை பராமரிப்பு பிரிவில் உலகளவில் முதன்மை வகிக்கும் தலைவராக வளர்ச்சியடைவதற்கான அனைத்து திறனையும், சாத்தியத்தையும் டாக்டர் அகர்வால்ஸ் கொண் டிருக்கிறது என்றார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழு மத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் அதில் அகர்வால் பேசுகையில், அடுத்த 3 ஆண்டுகளில் எமது சேவை வலையமைப்பை இரட்டிப்பாக் குவது நோக்கமாகும்.

ஏற்கனவே 15 மருத்துவமனைகளை ஆப் பிரிக்காவில் நடத்திவரும் நாங் கள், கென்யா, ஜாம்பியா, தான் சானியா ஆகிய நாடுகளில் இன்னும் விரிவுபடுத்துவோம்.

இந்நாடுகளில் புதியதாக 10 கண் சிகிச்சை மையங்களை தொடங்க திட்ட மிட்டிருக்கிறோம் என்றார்.

நிதிதிரட்டல் பரிவர்த்தனைக்கு டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட்-ன் நிதி சார் ஆலோசகராக வேதா கார்பரேட் அட்வைசர்ஸ் நிறுவனம் செயல்பட்டிருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img