fbpx
Homeபிற செய்திகள்நேரு பெயரை நீக்க எப்படி மனம் வருகிறது?

நேரு பெயரை நீக்க எப்படி மனம் வருகிறது?

டெல்லியில் உள்ள பல்வேறு இடங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பிரிட்டீஷ்காரர்கள் மற்றும் முகலாயர்களை குறிக்கும் வகையில் இருக்கும் தெருக்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் (முகாலய) தோட்டத்தின் பெயரை அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. முகல் என்பது முகலாயர்களை குறிக்கும் என்பதால் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.

இந்நிலையில் தான் தற்போது டெல்லியில் பிரபலமான நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (என்எம்எம்எல்) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர் என்பது பிரதம மந்திரி அருங்காட்சியகம் மற்றும் நூலக(பிஎம்எம்எல்) சொசைட்டி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக்குழு தலைவரான என நிர்பேந்திரா மிஸ்ரா உறுதி செய்துள்ளார்.

நாட்டில் 77 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. பண்டித ஜவகர்லால் நேருவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேருவின் பெயரில் உள்ள கட்டடங்களில் இருந்து நேருவை சிலர் அகற்றி அவரது புகழை மறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நேரு இந்தியாவுக்காக செய்த செயல்கள் மூலம் மக்கள் மனதில் நிலைத்து இருப்பார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. அவர் நாட்டுக்காக ஆற்றிய அரும்பணிகளை…தியாகத்தை யாராவது மறக்க முடியுமா? மறுக்கத் தான் முடியுமா? மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக போற்றப்பட்ட அந்த உன்னத தலைவரின் பெயரை நீக்க வேண்டிய அவசியம் என்ன?
இதனை காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, நாட்டு மக்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

எத்தனை இடங்களில் பெயரை மாற்றினாலும் நேருவின் புகழை யாராலும் அழிக்க முடியாது. எத்தனை தலைமுறை ஆனாலும் இந்திய குழந்தைகளின் இதயத்தில் நேரு மாமா நிலைத்து வீற்றிருப்பார்.

நேரு பெயரை நீக்க எப்படித்தான் மனம் வருகிறதோ?

படிக்க வேண்டும்

spot_img