fbpx
Homeபிற செய்திகள்350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை: அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்

350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை: அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்

தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களக் கொண்டு கற்றுத் தர வேண்டும் – பீஸ் கட்டவில்லை என்றால் அனைத்து பள்ளிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுப் பதை ஏற்றுக்கொள்ள முடியாது கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட் டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கி தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு.

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் 12,631 மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள், சுயநிதி உயர்நிலை பள்ளிகள், சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், இளம் மழலையர் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் அல்லாத பிற வாரியப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்வ கையான் தனியார் பள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பள்ளியின் அங்கீகாரத்தினைப் புதுப்பித்து ஆணை பெற்று செயல்பட்டு வருகின்றன.

மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகை யில் மண்டல வாரியாக அங்கீகாரச் சான்றுகளைப் புதுப்பித்து ஆணை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதற் கட்டமாக திருச்சி அரியலூர், திண்டுக்கல் கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளடக்கிய பத்து மாவட்டங்களைச் சார்ந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரச் சான்றுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியால் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவை, ஈரோடு நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் உள்ளடக்கிய ஐந்து மாவட்டங் களைச் சார்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு கோவை, வெங்கட் டாபுரத்தில் உள்ள அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் அங் கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். முன்னதாக தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர்.எஸ்.நாகராஜ முருகன் வர வேற்றுப் பேசினார். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் அமைச்சர் . அன்பில் மகேஸ் பொய்யாமொழி விழாப்பேருரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: 5 மாவட்டங்களைச் சேர்ந்த 350 தனியார் பள்ளி நிர்வா கிகள், தாளாளர்கள் வந்து உள்ளனர். மாணவிகள் பேண்ட் வாத்தியங்களை அருமையாக வாசித்துக் காட்டினர். எந்த பள்ளியிலும் இதுபோன்று நான் கண்டதில்லை.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை ஜூன் 30-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 10 மாவட்டங்கள் உள்ளடக்கிய பள்ளிகளுக்கு இந்த ஆணையை வழங்கினோம்.
அங்கீகார ஆணை முடிவுற்ற நிலையில் உள்ள பள்ளிகள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்.

கல்விப் பணி அனைத்திற்கும் மேலானது. மாணவச் செல்வங் களை நல்ல மனிதனாக ஆக்குவது பள்ளிக்கூடங்கள். அப்படிப்பட்ட இந்த பள்ளிகளுக்கு ஆணை வழங்குவது எனக்கு பெருமையாக உள்ளது.

அரசு பள்ளி மேம்படுத்துவது என்றாலும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் எங்கள் மாணவர்கள் தான். அதனால் தான், தனியார் பள்ளிகள் மீதும் கவனம் செலுத்துகின்றோம்.

ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் திரைப்படத்தின் மூலமாக கருத்தை பெற்று வரு கிறார்கள். தனியார் பள்ளியில் தமிழ் மொழிகள் கற்று தர வேண்டும். தமிழ் மொழியை தனியார் பள்ளிகளில் கொண்டு செல்ல நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பீஸ் கட்ட முடியவில்லை என்றால் ஒரு சில பள்ளிகள் தவறாக பயன்படுத்தும் பொழுது அனைத்து பள்ளிகளும் பதில் சொல்கிறது. அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, அங்கீகார ஆணைகளை பள்ளித் தாளாளர்கள் மற்றும் பள்ளி முதல் வர்களிடம் அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், எம்பி சண்முகசுந்தரம், துணைமேயர் வெற்றிசெல்வன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் சங்க தலைவர் ஆரோகிய ததயூஸ், தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) மற்றும் தனியார் பள்ளிகளின் சங்க பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். இறுதியாக கோவை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் லெ.சுமதி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img