தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக காணொளி வழியாக திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கோவை 22 -வது வார்டிலும் நகர்ப்புற நல வாழ்வு மையம் திறக் கப்பட்டது.
கோவை சேரன் மாநகர் நான்காவது பேருந்து நிறுத்தம் அருகே, அங்கன்வாடி மைய வளாகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மையத்தினை, 22-வது வார்டு மாநகராட்சி மா மன்ற உறுப்பினர் கோவை பாபு தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. மருத்துவர் சரண்யா, மாநகராட்சி உதவிப் பொறியாளர் ரமேஷ், கழக மாவட்ட துணைப் பொறுப்பாளர் அசோக் பாபு , மாவட்ட பிரதிநிதி சுஜினி செல்வராஜ், 22-வது வட்ட அவைத்தலைவர் ஆனந்தகுமார், வட்டச் செயலாளர் பிரபாகரன், கழக மூத்த முன்னோடி வேலுசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். மாநகராட்சி சுகாதார ஊக்குவிப்பாளர் லட்சுமி, செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



