கோவையில் தனியார் பேருந்து ஒன்றில் பயணிகள் டிக்கெட் கட்டணத்தை கியூஆர் கோடு மூலம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் தற்போது மிட்டாய் வாங்குவது முதல் தங்கம் வாங்குவது வரை அனைத்துமே ஆன்லைன் பேமென்ட் மூலமாக தான் நடக்கிறது.
அதிலும் குறிப்பாக கியூஆர் கோடு வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருளுக்கு பணத்தை செலுத்தி வருகிறார்கள். பெரிய மால்கள் தொடங்கி சிறிய கடைகள் வரை தற்போது கிஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இப்படி கடைகள், ஹோட்டல்கள் என அனைத்திலும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் பில்லை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பேருந்து ஒன்றில் டிக்கெட் எடுக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துனரிடம் கேட்டு QR கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வசதி பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



