fbpx
Homeபிற செய்திகள்காதணி விழாவிற்கு சாரட்டு வண்டியில் பவனி வந்து அசத்திய கோவை சிறுவன்- சீர்வரிசையாக வந்த மாநகர...

காதணி விழாவிற்கு சாரட்டு வண்டியில் பவனி வந்து அசத்திய கோவை சிறுவன்- சீர்வரிசையாக வந்த மாநகர அடையாள சின்னங்கள்

காதணி விழாவிற்காக கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக
எடுத்துக் கொண்டு, சாரட்டு வண்டியில் சிறுவன் அழைத்து வரப்பட்டது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை சங்கனூரை சேர்ந்தவர் மகேஷ்வரன். இவரது மகன் புகழேந்தி. இவரது காதணி விழா ஞாயிறன்று நடைபெற்றது. சிறுவனின் காதணி விழாவை வித்தியாசமான முறையில் நடத்த பெற்றோர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி, செண்டை மேளம் முழங்க வீட்டில் இருந்து விழா நடைபெறும் இடத்திற்கு சிறுவன் சாரட்டு வண்டியில் அழைத்துச் செல்லப்பட்டார்.

காதணி விழாவிற்கு கோவை யின் முக்கிய பகுதிகளான ரயில்நிலையம், மணிக்கூண்டு, கோனியம்மன் கோவில், மருதமலை கோவில் உள்ளிட்ட 8 பகுதிகளின் மாதிரிகளை சீர் வரிசையாக கையில் ஏந்திய அவரது உறவினர்கள்,
சிறுவனை ஒய்யாரமாக அழைத்து வந்தனர்.

கோவையை பெருமைப் படுத்தும் விதமாக இந்த சின்னங் களை சீர்வரிசையுடன் எடுத்து வந்ததாகவும், மேலும் நமது மாவட்ட அடையாள சின்னங்கள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்த செண்டை மேளம் முழங்க பேரணியாக நடந்து வந்ததாகவும் சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img