நீலகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்திரேலியாவின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன் மற்றும் அந் நாட்டின் சபாநாயகர் மிட் செல் ராபர்ட் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் டேவிட் ஹனி, கேசன்ர, டேவிட் ஸ்க்கைவ் ஆகியோர் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு முகா மில் வக்கீல்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாவட்ட நீதிபதி அப்துல் காதர், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர், சட்ட பணிகள் ஆணைகுழு தலைவர் லிங்கம், பார் அசோசியேஷன் தலைவர் மகாதேவன் , மகளிர் பார் அசோசியேஷன் தலைவர் ரேவதி, அரசு கூடுதல் வக்கீல் செல்வராஜ், வக்கீல்கள் டி. ஜோஸ் பிச் சையம்மாள், மாலினி, நஜீமா உட்பட பலர் பங் கேற்றனர்.



