ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் கோவை சிங்காநல்லூரில் நடப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சேவை தரும் பரிவர்த்தனை மற்றும் வங்கியியல் சிறப்பு பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.
இதனை வங்கியின் கோவை நிர்வாக அலுவலகத்தின் துணைப் பொது மேலாளர் திலிப் சிங் யாதவ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
அருகில் பிராந்திய மேலாளர்கள் கே.ஸ்ரீஜா, கே.இன்பரசு, உதவிப் பொது மேலாளர்கள் சுதாகர், பிச்சையா, ரங்கநாதன் ஆகியோர் உள்ளனர். இப்பிரிவில் வாடிக்கையாளர்கள் புதிய நடப்பு கணக்கை தொடங்கி பயன்பெறலாம்.



