கோவையில் உலகிலேயே முதன் முறையாக P4U புதிய மொபைல் செயலி அறிமுக விழா நடந்தது. விழாவில் கௌரவ விருந்தினராக கோவை கே. ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம் பங்கேற்றார்.
சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி டாக்டர் கலியமூர்த்தி, புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி பேசும்போது, இந்த அதிநவீன மொபைல் ஆப், சர்வதேச தரத்திலான இந்திய மொபைல் ஆப் ஆக வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்திய பொருளாதாரம் வளரும். என்றார்.
விஜய் டிவி புகழ் கீக்கி இந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சின்னத்திரை புகழ் அசார் மற்றும் டி.எஸ்.கே. பல குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள யூடியூபர்கள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் விருதுகளை பெற்றனர்.
புதிய செயலி குறித்து. பிளான்நெக்ஸ்ட்4U சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் எஸ்பி. விஜய், பிரியங்கா விஜய் ஆகியோர் கூறும்போது, P4U எனப்படும் இந்த புதிய செயலி மிக விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது கூகிள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்.
சர்வதேச தரத்தில் இந்தியாவில் உருவாகியுள்ள புதிய மொபைல் அப் இதுவாகும். இந்த ஒரே செயலியில் இ-காமர்ஸ் உட்பட நான்கு வகையான செயல்பாடுகள் உள்ளன.
உங்களிடம் உள்ள பொருட்களை விற்க வேண்டுமெனில் P4U- வில் பதிவு செய்தல் போதுமானது. நீங்கள் உங்கள் வீடுகளில் தயாரிக்கும் பொருட்களை எங்கள் மூலம், எங்களது விநியோக நிர்வாகிகள் உங்களது பொருட்களை சேகரித்து டெலிவரி செய்து விடுவர் என்றார்.
ஸ்ரீவாரி நிறுவனத்தின் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



