கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 84க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில் நீண்ட நாட்களாக குப்பைகள் தேங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்து அவ்விடத்தில் மாநகராட்சி நிர்வாகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் ஏஐஎம் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து 600 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் மரக்கன்றை நட்டுவைத்து தொடங்கி வைத்தனர்.
உடன் மண்டல குழுத்தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர் அலிமாபேகம், உதவி ஆணையர்கள் மகேஷ்கனகராஜ், அண்ணாதுரை, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



