தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ், வேகமாக வளர்ந்து வரும் பாரம்பரிய ஓய்வூதிய நிதி மேலாண்மை நிறுவனமான எச்டிஎப்சி பென்ஷன் மேனேஜ்மென்ட் லிமிடெட்டின், அசெட்ஸ் அண்டர் மேனேஜ்மென்ட் (ஏயுஎம்) நிதி, கடந்த 15-ம் தேதி ரூ.50,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.
எச்டிஎப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமி டெட் நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமான எச்டிஎப்சி பென்ஷன், கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலையில், நிறுவனத்தின் அடிப்படை ஏயுஎம் ரூ.10,000 கோடி இலக்கை எட்டிய நிலையில், அடுத்த முப்பத்து மூன்று (33) மாதங்களில் ஏயுஎம் மதிப்பு 400% அதிகரித்துள்ளது.
எச்டிஎப்சி பென்ஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீராம் ஐயர் கூறுகையில், ஏயுஎம் ரூ.50,000 கோடி என்ற இந்த மைல்கல்லைத் தாண்டியதில் மகிழ்ச்சியடைகிறோம்.
பத்து ஆண்டுவணிகத்தை நடப்பாண்டில் நிறைவு செய்யும்போது, இந்த சாதனை மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மைல்கல், மதிப்பிற்குரிய சந்தாதாரர்கள் எங்கள் நிறுவனத்தின் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.
ஏயுஎம் ரூ.50,000 கோடி என்ற வரம்பைத் தாண்டியதால், எங்கள் சந்தாதாரர்களுக்கான ஃபன்ட் மேனேஜ்மென்ட் கட்டணங்கள் மேலும் குறையும், இது மிகவும் செலவு குறைந்த திட்டமாக இதை மாற்றும்.
இதனால், அதிகமானோர் இந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பார்கள். இதன்மூலம் அவர்களின் பொன்னான வயோதிக வாழ்வை பாதுகாக்க முடியும் என்றார்.



