தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த முத்துகாளை என்பவர் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் 40 ஆயிரம் ரூபாயை தவறுதலாக வேறு நபருக்கு அனுப்பியதை தொடர்ந்து தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அரங்கநாயகி தலைமையிலான காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு நேற்று ரூ.40 ஆயிரம் பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.



