fbpx
Homeபிற செய்திகள்ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் நிறுவனத்தில் ஜூன் 30 வரை ‘கோல்டு லோன் மேளா’

ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் நிறுவனத்தில் ஜூன் 30 வரை ‘கோல்டு லோன் மேளா’

இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் ‘கோல்டு லோன் மேளா’ வரும் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜூன் 30 வரை தங்கநகைக் கடன் பெறும் அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்கள் கார், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 32 அங்குல எல்இடி டிவி-க்கள், குளிர்சாதன பெட்டிகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற பிரமாண்டமான பரிசுகளைவெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

‘கோல்டு லோன் மேளா’ வைத் தொடங்கி வைத்து ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தங் கநகைக் கடன்கள் பிரிவின் தலைவர் சவுரப் குமார் பேசியதாவது:

ஐ.ஐ.எஃப்.எல் கோல்டு மேளா பெரிய விழாவாக நடத்தப்படுகிறது. அனைவருக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது.

தங்கநகைக் கடன் வாடிக் கையாளர்கள் எங்கள் கிளைகளில் ஏதேனும் ஒன்றிற்குச் சென்று இச்சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் நிறுவனம் கவர்ச்சிகரமான பரிசுகளுடன், குறைவான மாதாந்திர வட்டி, விரைவான கடன் செயலாக்கம், தங்கத்திற்கு அதிகபட்ச கடன் மதிப்பு மற்றும் எளிதான டிஜிட் டல் வழி பணம் செலுத்தும் முறைகள் என பல சலுகைகளுடன் தங்கநகைக் கடன்களை வழங்குகிறது.

கோல்டு லோன் மேளாவில் பங்கேற்க, வாடிக்கையாளர்கள் ஐ.ஐ.எஃப்.எல் ஃபைனான்ஸ் நிறு வனத்தின் ஏதேனும் ஒரு கிளையை அணுகலாம் அல்லது ஆன்லைன் மூலமாக எனில் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குள் சென்று விண்ணப்பிக்கலாம்.

போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இணையதளத்தில் காணலாம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img