fbpx
Homeபிற செய்திகள்சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியின் ஐஇடி அகாடமி இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்பு

சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியின் ஐஇடி அகாடமி இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்பு

சென்னை தண்டலத்தில் உள்ள சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அன்ட் டெக்னிக்கல் சயின்சஸ் உறுப்பு கல்லூரியான சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியின் இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி (ஐஇடி) அகாடமியின் இணைப்பு அந்தஸ் தைப் புதுப்பித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொறியியல், தொழில்நுட்பம் அல்லது அது தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவு மற்றும் ஆதாரங்களை வழங்குவதற்காக ஐஇடி அகாடமிக் அபிலியேட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரிக்கு இந்த புதுப்பித்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழை இக் கல்லூரியின் இயக்குனர் டாக்டர் ரம்யா தீபக்கிடம் ஐஇடி -இங்கிலாந்தின் அங்கீகாரம் மற்றும் விருதுகளுக்கான தலைவர் டேனியல் கான்டி, ஐஇடி – இந்தியா வர்த்தக மேம்பாட்டுத் தலைவர் அமிதாப் சின்ஹா, ஐஇடி – இந்தியாவின் வாடிக்கையாளர் ஈடுபாட்டு பிரிவு மேலாளர் நேனகா சிங் மற்றும் லதா ராவ் ஆகியோர் வழங்கினர்.

கல்லூரி முதல்வர் பி. ரமேஷ், ஐஇடி ஆசிரியர் ஆலோசகர் ஹரிஹரன், சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியின் அசோ சியேட் டீன் நாட்ராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியின் இந்த சாதனை குறித்து சிமாட்ஸ் வேந்தர் என்.எம். வீரையன், கல்வியியல் இயக்குநர் தீபக் நல்லசுவாமி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img