கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.3க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பழுதடைந்த வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை உடனடியாக புனரமைத்து மாணவர் பயன்பாட்டிற்கு கொண்டவர உத்தரவிட்டார்.
உடன் வடக்கு மண்டலத்தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கவிதா, உதவி ஆணையர் மோகனசுந்தரி, மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் உத்தமன் ஆகியோர் உள்ளனர்.



