திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு கனவுகளில் ஒன்றான நொய்யலை மீட்டெடுக்க, மாந கராட்சி பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நம்முடைய முக்கிய கனவு திட்டமான காசிபாளையம் முதல் ஆண்டிபாளையம் வரை நொய்யலின் இரு கரைகளிலும் சாலை அமைக்கின்ற பணிக்காக திருப்பூர் நடராஜா தியேட்டர் உரிமையாளர்களும்
அவர்களுடைய குடும்பத்தினரும் துரைராஜ், மித்ரா மற்றும் பிரித்விராஜ் உள்ளிட்டோரும் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 20 சென்ட் நிலத்தை தானமாக வழங்கி இருக்கின்றார்கள்.
இதன் மூலம் திருப்பூர் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதோடு போக்கு வரத்து நெரிசலும் குறையும். இதற்காக அந்த குடும்பத்தினருக்கு திருப்பூர் மேயர் தினேஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும், வடக்கு மாவட்ட செயலாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஒட்டுமொத்த திருப்பூர் மாநகர மக்களின் சார்பாகவும் திருப்பூர் மாநகரத்தின் தந்தை என்கின்ற முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.



