அட்வான்ஸ்டு க்ரோ ஹேர் அண்ட் க்ளோஸ்கின் கிளினிக் தனது 17வது கிளையை ஈரோட்டில் துவக்கி உள்ளது. முடி வளர்ச்சி மற்றும் தோல் சிகிச்சையில் முன்னணி பிராண்டாக அறியப்பட்ட இந்த கிளினிக், சிறந்த சேவை, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் முடி வளர்ச்சிக்கான அணுகக்கூடிய ஆரோக்கிய தீர்வுகளை வழங்குவதில் முதன்மையான முக்கியத் துவம் அளிக்கிறது.
பெர்குடேனியஸ் FUE முடி மாற்று சிகிச்சை, PRP Pro+, லேசர் முடி சிகிச்சை, மேம்பட்ட GroHair ஒப்பனை அமைப்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மருத்துவ மற்றும் மருத்துவமற்ற அணுகுமுறைகளை அவர்களின் விரிவான சிகிச்சைகள் உள்ளடக்கியது. இவை அனைத்தும் US-FDA ஆல் முழுமையாக அங்கீ கரிக்கப்பட்டுள்ளன.
ஹைட்ராஃபேஷியல், க்யூ ஸ்விட்ச்டு லேசர், கெமிக்கல் பீல், போடோக்ஸ், ஃபில்லர்ஸ், த்ரெட் லிஃப்ட், ஃபுல் பாடி லேசர், ஃபேஸ் பிஆர்பி, மருக்கள் அகற்றுதல் மற்றும் விதிவிலக்கான தோல் சிகிச்சைகளை வழங்குகிறார்கள். இந்த கிளினிக்கில் அதிநவீன கருவிகள் உள்ளன.
திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களான ஜனனி ஐயர், விடியல் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., காங்கேயம் தொகுதி, கே. ஜெயப்பிரகாஷ், காக்ஸ் அண்ட் கிங்ஸ் தமிழ்நாடு, இயக்குநர் மற்றும் பிராண்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், சரண் வேல் ஜே. பிரான்ச்சைஸின் உரிமையாளர் என்.திரு மூர்த்தி கவிதா, எம்.சிவ குமார், எல்.பனையப் பன், ஆதர்ஷ் ஆர் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.



