fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (16ம் தேதி) உதவி ஆட்சியர் கௌரவ்குமார் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் தூத்துக்குடி கீழத்தட்டப்பாறை உள்வட்டத்திற்கு (பிர்கா) உட்பட்ட வருவாய் கிராமங்களான உமரி கோட்டை, மேல தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, அல்லிக்குளம், மறவன்மடம், செந்திலாம் பண்ணை, தெற்கு சிலுக்கன் பட்டி, பகுதி கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு அடிப்படைத் தேவைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் செந்தில்ராஜ் ஆலோசனையின் பேரில் ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வுகாண வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உதவி ஆட்சியர் கௌரவ்குமார் உத்தரவிட்டார்.

ஜமாபந்தி நிகழ்ச்சியில் அல்லிக்குளம் ஊராட்சி முருகன் நகரில் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் தண்ணீர் 3 மாத காலமாக வரவில்லை என்றும், எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் லாரி லாரியாக விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று 300 குடும்பங்களை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு உதவி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நிகழ்வில் வட்டாட்சியர்கள் பிரபாகரன், ராஜ செல்வி, ஜான்சன் தேவ சகாயம், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img